Thursday, 29 September 2016

கடலை மாவு தோசை

கடலை மாவு தோசை

கடலை மாவு தோசை

 

தேவையானவை:

 கடலை மாவு, அரிசி மாவு - தலா 100 கிராம்

 கோதுமை மாவு - 50 கிராம்

 பெரிய வெங்காயம் - 1

 காய்ந்த மிளகாய் - தேவையான அளவு

 கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

 தேங்காய்த் துருவல் - 100 கிராம்

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, கோதுமை மாவை ஒன்றாக சேர்த்து போதுமான தண்ணீர் சேர்த்துக் கலக்கி... தேங்காய் துருவலைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகத்தைச் சேர்க்கவும். இவை அனைத்தையும் மாவுடன் சேர்த்துக் கலக்கவும். சூடான தோசைக்கல்லில் மாவை தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 

No comments:

Post a Comment