Wednesday 28 September 2016

காடை பார்பிக்யு

காடை பார்பிக்யு

காடை பார்பிக்யு

 

தேவையானவை:

 காடை - 1

 வெண்ணெய் - 100 கிராம்

 

 மசாலா செய்ய  :

 வினிகர் - 4 டேபிள்ஸ்பூன்

 டொமேட்டோ கெட்சப் - 3 டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மசாலா செய்யக் கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று கலந்து வைக்கவும். இதை சுத்தம் செய்த காடையின் மீது நன்கு தடவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, பார்பிக்யு சார்கோல் அடுப்பில் கங்குகள் போட்டு, மேலே காடையை வைத்து இருபுறமும் அவ்வப்போது வெண்ணெய் தடவி 25 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். காடையை வேக வைக்கும் போது அதன் கால்களைக் கட்டிவிட்டு வேக வைக்கவும். இல்லையென்றால் அது தீயின் வேகத்தில் பிரிந்து சரியாக வேகமால் போய்விடும். பார்பிக்யு கிரில் அடுப்பு இல்லாதவர்கள் காடையை இரண்டாக நறுக்கி, தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காடையைச் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

 

No comments:

Post a Comment