Wednesday 28 September 2016

கிரில்ட் மீன்

கிரில்ட் மீன்

கிரில்ட் மீன்

 

தேவையானவை:

 வஞ்சிரம் மீன் - அரை கிலோ

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய சின்ன் வெங்காயம் - 50 கிராம்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4

 பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 புளி - 40 கிராம் (கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்)

 வாழை இலை - தேவையான அளவு

 வெண்ணெய் - 100 கிராம்

 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வறுத்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்), மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். அதனுடன் புளிக்கரைசலைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இந்தக்கலவையை சுத்தம் செய்த வஞ்சிரம் மீனில் தடவி, நறுக்கிய வாழையிலையில் வைத்து சுற்றி, அதனை வாழைநாரால் கட்டி விடவும். பிறகு  பார்பிக்யு சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து இருபது நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். அவ்வப்போது வாழை இலையைப் மேல் வெண்ணெய் தடவவும்.

பார்பிக்யு அடுப்பு இல்லாதவர்கள் தோசைக்கல்லில் வைத்து, சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். வெந்ததும் வாழை இலையைப் பிரித்து விட்டுப் பரிமாறவும்.

No comments:

Post a Comment