மஷ்ரூம் ஸ்டஃப்டு டொமேடோஸ்
மஷ்ரூம் ஸ்டஃப்டு டொமேடோஸ்
தேவையானவை:
மொட்டுக் காளான் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். காளான், வெங்காயம் மற்றும் கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், காளானுடன், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். கலவை வெந்தவுடன் இறக்கினால் மசாலா தயார்.
தக்காளியின் காம்புப் பகுதியில் மேலாகச் சீவி, உள்ளே இருக்கும் விதைகளை மெதுவாக வெளியே எடுத்துவிடவும். வதக்கி தயார் செய்து வைத்துள்ள மசாலா கலவையை தக்காளிக்குள் மெதுவாக நிரப்பவும். இதை பேக்கிங் அவனில் பத்து நிமிடங்கள் 150 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் வைத்தால், தக்காளியில் இருக்கும் தண்ணீர் வற்றி, அதன் தோல் சுருங்கி வெந்திருக்கும். பிறகு வெளியே எடுத்து ஸ்நாக்ஸ் போல பரிமாறவும்.

No comments:
Post a Comment