Thursday 29 September 2016

தவா சப்ஜி (வெஜிடபிள் மசாலா)

தவா சப்ஜி (வெஜிடபிள் மசாலா)

தவா சப்ஜி (வெஜிடபிள் மசாலா)

 

தேவையானவை 

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

 பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணிக் கலவை - 100 கிராம்

 கீறிய பச்சைமிளகாய் - 2

 தக்காளி - 2 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 எலுமிச்சைச்சாறு - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்)  - ஒரு டீஸ்பூன்

 கரம்மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 ஓமம் - கால் டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

காய்கறிகளைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.  இதனுடன் தக்காளி விழுது சேர்த்து சுண்டி வந்ததும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம்மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்த காய்கறிகள், உப்பு, ஆம்சூர் பவுடர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். கலவையில் தண்ணீர் வற்றியதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment