Monday, 26 September 2016

மீன் பிரியாணி

மீன் பிரியாணி

மீன் பிரியாணி

 

தேவையானவை:

 

 பாசுமதி அரிசி - 200 கிராம்

 தண்ணீர் - 300 மில்லி

 பெரிய வெங்காயம் - 150 கிராம் (நறுக்கியது)

 தக்காளி - 100 கிராம்

 புதினா - கால் கட்டு

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 தயிர் - ஒரு கப்

 பச்சைமிளகாய் - 4 கீறியது

 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

 உப்பு - தேவையான அளவு

 நெய் + ஆலிவ் ஆயில் - முக்கால் கப்

 குங்குமப்பூ - ஒரு சிட்டிகை (வெதுவெதுப்பான கால் கப் பாலில் ஊற விடவும்)

 கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு

 எலுமிச்சை - அரை பழம் (சாறு எடுக்கவும்)

 எண்ணெய் - தேவையான அளவு

 ஆலிவ் ஆயில் - 3 டேபிள்ஸ்பூன்

 

மீன் ஊற வைக்க:

 

 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)

 ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்

 நெய் மீன் - கால் கிலோ

 

செய்முறை:

 

நறுக்கி சுத்தம் செய்த மீனை ஊற வைக்கத் தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பொன்னிறமாக மீன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை 3 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலில் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கி எடுக்கவும். பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

 

ஆழமான பாத்திரம் அல்லது குக்கரில் நெய் + ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி நன்கு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லித்தழையை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

 

இத்துடன் 300 மில்லி தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கி கொதிக்க விட்டு, உப்பு, காரம் சரிபார்த்து அரிசி, குங்குமப்பூ சேர்த்து வேகவைத்து தனியே வைக்கவும். அகலமான பாத்திரத்தில் 3 பொரித்த மீன் துண்டுகள், அதன் மேல் 3 டீஸ்பூன் வதக்கிய பெரியவெங்காயம், அதன் மேல் வேகவைத்த சாதம் என ஒன்றின் மேல் ஒன்றாக இப்போது சொல்லியிருக்கும் வரிசையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தை மூடி அப்படியே அடுப்பில் வைத்து தீயைக் குறைக்கவும். பாத்திரத்தின் மேல் கனமான பொருளை வைத்து, 5 நிமிடங்கள் 'தம்' போடவும். சுவையான மீன் பிரியாணி ரெடி. சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment