கேரட் தயிர் பச்சடி
கேரட் தயிர் பச்சடி
தேவையானவை:
துருவிய கேரட் - ஒரு கப்
புளிப்பில்லாத தயிர் - அரை கப்
பச்சைமிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் துருவிய கேரட், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து தயிர் பச்சடியில் ஊற்றவும்.

No comments:
Post a Comment