கொங்கு நாட்டுக் கோழிக்குழம்பு
கொங்கு நாட்டுக் கோழிக்குழம்பு
தேவையானவை:
சிக்கன் - முக்கால் கிலோ
இஞ்சி-பூண்டு விழுது -
ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 4
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க :
மல்லி (தனியா) -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 7
மிளகு - ஒரு டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
தேங்காய் - ஒன்றில் பாதி
(துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 10
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றில் வெங்காயம் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கன் சேர்த்து வதக்கவும். எண்ணெயின் சூட்டிலேயே சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை இத்துடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment