Monday, 26 September 2016

சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்

சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்

சேலம் பிச்சுப்போட்ட கோழி வறுவல்

 

தேவையானவை:

 கோழி - முக்கால் கிலோ

 இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை  டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 சோம்பு - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 காய்ந்த மிளகாய் - 2

 தோலுரித்த சின்ன வெங்காயம் - 100 கிராம்

 பச்சைமிளகாய் - 2

 மல்லித்தூள் (தனியாத்தூள்) -

  ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் -ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து  விருப்பப்பட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும். இத்துடன் இஞ்சி -பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள்  ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் வேகவைத்த சிக்கன் சேர்த்து வதக்கி மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி மசாலா வாசனை போனதும் மிளகுத்தூள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment