Wednesday 28 September 2016

முறுக் மக்கன் வாலா (சிக்கன் பட்டர் கிரேவி)

முறுக் மக்கன் வாலா (சிக்கன் பட்டர் கிரேவி)

முறுக் மக்கன் வாலா (சிக்கன் பட்டர் கிரேவி)

 

தேவையானவை 

 சிக்கன் (கோழிக்கறி)  - ஒரு கிலோ

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  - 2

 தக்காளி பேஸ்ட் - 5 தக்காளிக்கு உரியது

 பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒன்று

 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 காஷ்மீரி மிளகாய்த்தூள்-  2 டேபிள் ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 கரம்மசாலாத் தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 அரைத்த முந்திரி விழுது - 50 கிராம்

 ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

 கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

 

பொரிப்பதற்கான மசாலா தயாரிக்க :

 கெட்டித்தயிர்  - 100 மில்லி

 கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகத் தூள் - ஒன்றரை  டீஸ்பூன்

 காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 கறுப்பு உப்பு  - ஒன்றரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 

தாளிக்க :

 பட்டை - ஒரு துண்டு

 கிராம்பு -  4

 ஏலக்காய் - 3

 சீரகம் - அரை டீஸ்பூன்

 பிரிஞ்சி இலை - ஒன்று

 வெண்ணெய் - 100 கிராம்

 

செய்முறை:

சிக்கனை (கோழிக்கறி) துண்டுகளாக்கி நன்கு கழுவிக் கொள்ளவும், ஒரு பவுலில் பொரிக்கக் கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப்பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி சிக்கன் துண்டுகளைச் சேர்த்துப் புரட்டி எடுத்து அரை மணி நேரம் ஊறவிடவும். வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளைப் பொரித்து எடுக்கவும். மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், குடமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் தக்காளி பேஸ்ட், காஸ்மீரி மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும் இதில் அரைத்த முந்திரி, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்க விடவும். அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு கஸூரி மேத்தி ,வெண்ணெய், சர்க்கரை, ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கிளறி இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப்  பரிமாறவும்.

No comments:

Post a Comment