Wednesday 28 September 2016

மீன் குழம்பு

மீன் குழம்பு

மீன் குழம்பு

 

தேவையானவை:

 சின்னவெங்காயம் - ஒரு கைப்பிடியளவு

 

 நாட்டுத்தக்காளி - 2

 

 பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)

 

 பூண்டு - 4 பல்

 

 இஞ்சி - ஒரு துண்டு

 

 தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 

 மிளகாய்த்தூள் - 20 கிராம்

 

 மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்

 

 புளிக்கரைசல் - தேவையான அளவு

 

 உப்பு - தேவையான அளவு

 

 வஞ்சிரம் மீன் - அரை கிலோ

 

 நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 

 கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை - தலா ஒரு டீஸ்பூன்

 

 கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் (நறுக்கியது)

 

செய்முறை:

வஞ்சிரம் மீனைக் குழம்புக்கு ஏற்றவாறு நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். சின்னவெங்காயத்தில் பாதியளவை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டுபச்சை மிளகாய் இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரைத்த வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் மற்றும் தேங்காய் விழுதை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்த பிறகு மீன் துண்டுகளைச் சேர்த்து அடுப்பைச் சீராக்கி மீன் வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment