Sunday, 25 September 2016

மட்டன் வெஞ்சனம்

மட்டன் வெஞ்சனம்

மட்டன் வெஞ்சனம்

 

தேவையானவை:

பொடியாக நறுக்கிய

பெரிய வெங்காயம் - 2

மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3

இஞ்சி-பூண்டு விழுது -

2 டேபிள்ஸ்பூன்

மட்டன் - அரை கிலோ

மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -

2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

 

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

மிளகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை :

மட்டனை சுத்தம் செய்து விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய மட்டன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிவைக்கவும். ஐந்து விசில் வந்ததும் அடுப்பை அணைத்துக் கிளறிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment