Sunday 9 October 2016

நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காய் சாதம்

நெல்லிக்காய் சாதம்

 

தேவையானவை:

 

 வேகவைத்த சாதம் - 2 கப்

 பெரிய‌ நெல்லிக்காய் -8 முதல் 10

 காய்ந்த மிளகாய் - 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள்)

 கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

 பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயம் - கால் டீஸ்பூன்

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்

 மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை

 சீரகம் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த நெல்லிக்காயை ஈரம் போகத் துடைத்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காயின் சதைப்பகுதியைத் துருவி அல்லது சற்று பெரியதாக நறுக்கி, அதனை மிக்ஸியில் சேர்த்து சாறு எடுத்து தனியே வைத்துக் கொள்ளுங்கள்.

 

அடுப்பில் அடிப்பகுதி கனமான கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு சேர்த்து பொரிந்து வரும்பொழுது சீரகம், உளுத்த‌ம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கடலைப்பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பெருங்காயம், நெல்லிக்காய் சாறு, மஞ்சள்த்தூள் சேர்த்து சாறு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்த சாதத்தை, தேவையான அளவு சேர்த்துக் கிளறி அடுப்பு தீயை மிதமாக்கி இரண்டு நிமிடம் கழித்து இறக்கி அப்பளத்தோடு பரிமாறுங்கள்.

 

No comments:

Post a Comment