மேத்தி கா தெப்லா
மேத்தி கா தெப்லா
தேவையானவை:
மேத்தி (வெந்தய இலைகள்) - 250 கிராம்
கோதுமை மாவு - 375 கிராம் + சிறிதளவு
இஞ்சி பேஸ்ட் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்/தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நெய்/வெண்ணெய் - சிறிது (விருப்பப்பட்டால்)
செய்முறை:
வெந்தய கீரை இலைகளைக் கழுவி ஈரம் போனதும் பொடியாக நறுக்கி வைக்கவும். கோதுமை மாவு மற்றும் நறுக்கிய இலைகளை ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து மீதம் உள்ள பொருட்களில் எண்ணெய், நெய் நீங்கலாக மற்ற அத்தனையையும் கலந்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் கலந்து சப்பாத்தியாகப் பிசைந்து வைக்கவும். இதை சிறிய உருண்டைகளாகப் பிரித்து, சிறிது மாவு தொட்டு சப்பாத்திகளாக தட்டி வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சப்பாத்தியை போட்டு வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக வைத்து எடுக்கவும். வேகும் போது சிறிது எண்ணெயை சப்பாத்தியின் மேல் தெளிக்கவும். விருப்பப்பட்டால் சிறிது நெய் அல்லது வெண்ணெயை இரண்டு புறம் மேற்பகுதியில் சேர்க்கலாம். இது, ஊறுகாய் அல்லது ரைத்தாவுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment