Wednesday, 5 October 2016

சிக்கன் முட்டை வறுவல்

சிக்கன் முட்டை வறுவல்

சிக்கன் முட்டை வறுவல்

 

தேவையானவை:

 

போன்லெஸ் சிக்கன் (எலும்பில்லாத கோழிக்கறி)- 100 கிராம்

முட்டை - 1

மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள்  - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  - அரை டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

சோம்பு - அரை டீஸ்பூன்

பட்டை - சிறிய துண்டு

இஞ்சி - 2 கிராம் (தோல் நீக்கி நசுக்கிக்கொள்ளவும்)

கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

சிக்கனை நன்கு கழுவி பொடியாக நறுக்கி, பிளண்டரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிளண்டரில் இருந்து வழித்தெடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விடவும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம், இஞ்சி சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாற வதக்கி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, குறைந்த தீயில் ஒரு நிமிடம் வதக்கவும். அரைத்த சிக்கனை இதில் சேர்த்து மசாலா எல்லாம் சிக்கனில் ஒட்டும் வரை குறைந்த தீயில் மூன்று முதல் நான்கு நிமிடம் வரை வதக்கவும். பிறகு, சிக்கனை லேசாக ஒதுக்கி, வாணலியின் நடுவில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் முட்டைக் கலவையை ஊற்றி, ஒரு நிமிடம் மரக்கரண்டி அல்லது ஸ்பூனால் வதக்கவும். இதில், சிக்கனை முட்டைக் கலவையோடு சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment