Wednesday, 5 October 2016

மட்டன் முடக்கத்தான் கீரைக் குழம்பு

மட்டன் முடக்கத்தான் கீரைக் குழம்பு

மட்டன் முடக்கத்தான் கீரைக் குழம்பு

 

தேவையானவை:

 

மட்டன் (ஆட்டுக்கறி) - 200 கிராம்

வெங்காயம் - 60 கிராம்

தக்காளி - 30 கிராம்

இஞ்சி விழுது - 30 கிராம்

பூண்டு விழுது - 30 கிராம்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 25 மில்லி

பச்சை மிளகாய் விழுது - 25 கிராம்

முடக்கத்தான் கீரை - 1 கட்டு (வேகவைத்து மசித்துக் கொள்ளவும்)

பட்டை - 5 கிராம்

ஏலக்காய்  - 3 கிராம்

கிராம்பு - 2 கிராம்

 

செய்முறை:

 

ஆட்டுக்கறியில் பச்சைமிளகாய் விழுது, இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு புரட்டி இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும். பிறகு, வெளியில் எடுத்து மிதமான நிலைக்கு வந்த பிறகு, பிரஷர் குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் வேகவைத்த மட்டன், வேகவைத்து மசித்த முடக்கத்தான் கீரை மசியலைச் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.

 

No comments:

Post a Comment