Friday 7 October 2016

புரோக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

புரோக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

புரோக்கோலி ஸ்ட‌ஃப்டு மிளகாய் பஜ்ஜி

 

தேவையானவை:

 

பஜ்ஜி மிளகாய் - 5

 

கடலைமாவு - ஒரு கப்

 

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

 

மைதா மாவு - ஒரு டீஸ்பூன்

 

பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

 

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்

 

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 

கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை

 

உப்பு - தேவையான அளவு

 

எண்ணெய் - தேவையான அளவு

 

புரோக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்:

 

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

 

புரோக்கோலி - அரை கப் (பூக்களாகப் பிரித்துக் கொள்ளவும்)

 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்

 

பொடியாக நறுக்கிய இஞ்சி - கால் டீஸ்பூன்

 

சீரகம் - அரை டீஸ்பூன்

 

மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்

 

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

பஜ்ஜி மிளகாயைக் கழுவி ஈரம் போக துடைத்து, தனியே வைக்கவும். ஸ்டஃபிங் செய்வதற்குத் கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும். தேவையானவை பட்டியலில் உள்ள மற்ற பொருட்களில் எண்ணெய் தவிர மற்றவற்றை சிறிது சிறிதாகக் கலந்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவாகக் கரைத்து வைக்கவும். ஒரு பஜ்ஜி மிளகாயை எடுத்து நடுவில் நீளமாகக் கீறி, அதன் உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு, புரோக்கோலி உருளைக்கிழங்கு ஸ்டஃபிங்கை நிரப்பி வைக்கவும். இப்படி அனைத்து மிளகாயின் உள்ளேயும் ஸ்டஃபிங்கை நிரப்பவும். அடுப்பில் வாணலியை வைத்து, பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி, சூடானதும் தீயை மிதமாக்கவும். ஸ்டஃப் செய்த மிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து, மெதுவாக எண்ணெயில் போடவும். ஒரு பக்கம் வெந்ததும் கரண்டியால் மறுபுறத்தை வேக வைத்து எடுத்து, ஆறியதும் 'கெட்சப்' அல்லது தேங்காய் சட்னியோடு பரிமாறவும்.

 

No comments:

Post a Comment