Saturday, 1 October 2016

பஹாரா பைங்கன்

பஹாரா பைங்கன்

பஹாரா பைங்கன்

 

தேவையானவை:

 

கத்திரிக்காய் - 4

பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்

பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

பச்சைமிளகாய் - 2

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்.

 

அரைக்க:

 

நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்

துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்

வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 1 டீஸ்பூன்

கிராம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - அரை டீஸ்பூன்

ஏலக்காய் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்து ஆறியதும், மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். கத்திரிக்காயை நான்காக வெட்டி, ஒரு கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் போடவும் (இது கத்திரிக்காயை நிறம் மாறாமல் வைக்க உதவும்). வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, அரைத்து  வைத்துள்ள மசாலாத்தூள் சேர்த்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment