Saturday, 1 October 2016

வெண்தாமரை பானம்

வெண்தாமரை பானம்

வெண்தாமரை பானம்

 

தேவையானவை:

 வெண்தாமரை - 2

 பொடித்த பனங்கற்கண்டு - 200 கிராம்

 ஏலக்காய் - 6 (பொடித்துக் கொள்ளவும்)

 

செய்முறை:

வெண்தாமரையின் இதழ்களைச் சுத்தம் செய்துகொள்ளவும். அடுப்பில் மண்சட்டியை வைத்து சூடானதும், இதில் தாமரைச் இதழ்களைச் சேர்த்து, இவற்றுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி (குளோரின் கலக்காத நீராக இருக்க வேண்டும்) மிதமான சூட்டில் காய்ச்சவும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டியதும், சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டி, பொடித்த பனங்கற்கண்டு, ஏலக்காயைக் கலந்து மறுபடியும் வடிகட்டவும். வடிகட்டிய பானத்தை, பாட்டில் (அ) பாத்திரத்தில் ஊற்றி வைத்துகொண்டு காலை, மாலை என இருவேளைகளிலும் அருநதலாம். வேக வைத்த வெண்தாமரை இதழ்களுடன் மறுபடியும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, சற்று சுண்ட வைத்து வடித்துச் சேர்த்துக் கொள்ளலாம்.

 

குறிப்பு:

மூளையில் உள்ள செல்களுக்கு நல்ல வலுவை அளித்து, நரம்பு மண்டலத்துக்கு உரமூட்டக்கூடிய அபூர்வ ஆற்றலும், இதயத்துக்கு பலமளிக்கும் ஒப்பற்ற சக்தியும்

No comments:

Post a Comment