Sunday 9 October 2016

பிரெட் பீட்ஸா கப்ஸ்

பிரெட் பீட்ஸா கப்ஸ்

பிரெட் பீட்ஸா கப்ஸ்

 

தேவையானவை:

 

கோதுமை பிரெட் - 6 ஸ்லைஸ்

 டொமேட்டோ சாஸ் - அரை கப்

 சீஸ் அல்லது மொசரல்லா சீஸ் - அரை கப்  (துருவியது)

 கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி - ஒரு கப்

 ஆலிவ் ஆயில் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

பேக்கிங் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு சூடுபடுத்திக் கொள்ளவும். அனைத்துக் காய்கறிகளையும் உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கி விடவும். மஃபின் கப்புகளில் ஆலிவ் ஆயில் தடவி, அதன் உள்ளே பிரெட்டுகளை நுழைத்தால் கப்புகளில் பிரெட்கள் வட்டவடிவில் உட்கார்ந்து கொள்ளும். கப்புக்கு வெளியே தெரியும் பிரெட் பகுதிகளை நறுக்கி விடவும். இப்படி மஃபின் கப் செட்டுகளில் எல்லாம் பிரெட்டுகளை நுழைக்கவும். பிரட்டின் உள்ளே டொமேடோ சாஸை ஊற்றி சாஸின் மேல் காய்கறிகளைச் சேர்த்து சீஸை பரப்பவும். இவற்றை அவனில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால், அருமையான பிரெட் பீட்ஸா கப்ஸ் ரெடி.

 

 

No comments:

Post a Comment