Sunday 9 October 2016

குஜராத்தி கதி

குஜராத்தி கதி

குஜராத்தி கதி

 

தேவையானவை :

 

தயிர் - 1 கப்

கடலைமாவு - கால் கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்த்தூள்- அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்

தூளாக்கப்பட்ட வெல்லம் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

தேங்காய்த் துருவல் - சிறிதளவு

 

தாளிக்க:

 

எண்ணெய் - 1 டீஸ்பூன்

கடுகு - அரை  டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 4 முதல் 5 இலைகள்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு - 2

பச்சைமிளகாய் - ஒன்றை நான்காக வெட்டிக் கொள்ளுங்கள்.

கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌

 

செய்முறை:

 

தயிரையும் கடலைமாவையும் ஒரு கடாயில் சேர்த்து, கூடவே இரண்டு அல்லது மூன்று கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயை அப்படியே அடுப்பில் வைத்து, இதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை வைக்க வேண்டும்.

அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து தாளித்து அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் கலவையில் சேருங்கள். கிரேவி நன்கு கொதித்ததும் தேங்காய்த் துருவலைத் தூவி கிச்சடி அல்லது சாதத்துடன் பரிமாறுங்கள்.

 

No comments:

Post a Comment