Sunday 9 October 2016

இளநீர் ரவை ஸ்மூத்தி

இளநீர் ரவை ஸ்மூத்தி

இளநீர் ரவை ஸ்மூத்தி

 

என்னென்ன தேவை?

 

ரவை - 1/2 கப்,

துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன்,

வெங்காயம் - 2 டீஸ்பூன் (பொடியாக அரிந்து கொள்ளவும்),

தக்காளி - 1 (பொடியாக அரிந்து கொள்ளவும்),

கலப்புக் காய்கறிகள் - 3/4 கப் (பொடியாக அரிந்து கொள்ளவும்),

புதினா - 1 கைப்பிடி (பொடியாக அரிந்து கொள்ளவும்),

கறிவேப்பிலை- 10 (பொடியாக அரிந்து கொள்ளவும்),

இளநீர் - ஒன்றரை கப்,

இளநீர் வழுக்கை - 2 டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

 

இளநீரில் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை பிரஷர் பானில் சூடாக்கவும். கடுகு, சீரகம் சேர்த்து கடுகு வெடிக்கும் வரை வதக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். காய்கறிகளை சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள்தூள், பொடியாக அரிந்த புதினா இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். துவரம்பருப்பு, ரவை சேர்த்து வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பை சரிபார்க்கவும். 4 விசில் வரும் வரை வேக வைக்கவும். சத்தம் அடங்கியவுடன் மூடியை திறந்து மிளகு, இளநீர் மற்றும் இளநீர் வழுக்கை சேர்த்துக் கொதிக்க விடவும். சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment