Sunday 9 October 2016

வெந்தய தயிர் சாதம்

வெந்தய தயிர் சாதம்

வெந்தய தயிர் சாதம்

 

என்னென்ன தேவை?

 

பச்சரிசி - 1 கப்,

தண்ணீர் - 3 கப்,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

வெந்தயம் - 1 டீஸ்பூன்,

கடுகு - ½ டீஸ்பூன்,

பச்சை மிளகாய் பொடித்தது - 2,

கறிவேப்பிலை - சிறிது,

முந்திரி - அலங்கரிக்க,

புளிப்பில்லாத தயிர் -  தேவைக்கு.

சீரகம் - 1 டீஸ்பூன்

 

எப்படிச் செய்வது?

 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை நன்கு குழைய வேக வைத்து அதில் உப்பு சேர்த்து சூடாக வைக்கவும். ஒரு கடாயில்  தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் சேர்த்து சிவக்க தாளித்து இத்துடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சூடாக இருக்கும்போதே தாளிப்பை சேர்த்துக் கிளறவும். சாதம் மிதமான இருக்கும்போது தயிர், முந்திரி சேர்த்து கிளறி உடனே சூடாக பரிமாறவும். இந்த சாதத்தை சூடாகத்தான் பரிமாற வேண்டும். பொரித்த வெந்தய வாசத்துடன், மிகவும் மணமாகவும், ருசியாகவும்  இருக்கும்.

No comments:

Post a Comment