சிக்கன் ஸ்பிரிங் ரோல்
சிக்கன் ஸ்பிரிங் ரோல்
தேவையானவை:
போன்லெஸ் சிக்கன் (சிறிய துண்டுகளாக்கவும்) - 100 கிராம்
கேரட், பெரிய வெங்காயம் - தலா 50 கிராம்
குடமிளகாய் - 25 கிராம்
பச்சைமிளகாய் - 1
இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு
பூண்டு - 7 பல் (இடித்துக் கொள்ளவும்)
மைதா மாவு - 50 கிராம்
கார்ன்ஃப்ளார் - 100 கிராம் + சிறிது (ரோலின் மீது தூவ)
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
முட்டை - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
சிக்கனை உப்பு சேர்த்து வேகவைத்தெடுக்கவும். கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். ஒரு பவுலில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார், முட்டை (சிறிதளவு வெள்ளைக்கருவைத் தனியாக எடுத்து வைக்கவும்). தண்ணீர், உப்பு சேர்த்து மாவை தண்ணீராக கரைத்துக்கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவைச் சூடாக்கி மாவை மீடியம் சைஸில் ஊற்றி, வேகவிட்டு எடுத்தால் (மறுபுறம் வேகவைக்கத் தேவையில்லை), ரோலுக்கு தேவையான பேஸ் ரெடி.
அடுத்ததாக, வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் பூண்டு, கேரட், குடமிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேகவைத்த சிக்கன், சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
இப்போது ரெடி செய்து வைத்த பேஸின் நடுவே வதக்கிய சிக்கன் கலவையை வைத்து மெதுவாக உருட்டி, சிறிதளவு வெள்ளைக்கருவை தோசையின் ஓரங்களில் தடவி ஓட்டவும். இடைவெளிகள் இருக்கக் கூடாது. இனி ரோலின் மீது சிறிதளவு கார்ன்ஃப்ளார் மாவு தூவவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், சிக்கன் ஸ்பிரிங் ரோலைச் சேர்த்து பொரித்தெடுத்து ஆறியதும், துண்டுகளாக்கி சோயா சாஸுடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment