Tuesday, 27 September 2016

நண்டு மசால்

நண்டு மசால்

நண்டு மசால்

 

தேவையானவை:

 நண்டு - ஒரு கிலோ

 கடலை எண்ணெய் - 100 மில்லி

 சோம்பு - 2 கிராம்

 பட்டை - 2 கிராம்

 கிராம்பு - ஒரு கிராம்

 அன்னாசிப்பூ - 2 கிராம்

 ஏலக்காய் - ஒரு கிராம்

 பிரிஞ்சி இலை - ஒரு கிராம்

 வெந்தயம் - 3 கிராம்

 சின்ன வெங்காயம் - கால் கிலோ

 பச்சை மிளகாய் - 50 கிராம்

 கறிவேப்பிலை - 2 கிராம்

 பூண்டு விழுது - 40 கிராம்

 இஞ்சி விழுது - 20 கிராம்

 மஞ்சள்தூள் - 3 கிராம்

 தக்காளி - 100 கிராம்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம்

 மிளகாய்த்தூள் - 60 கிராம்

 எலுமிச்சைச் சாறு - ஒரு பழம்

 மிளகு மற்றும் சீரகத்தூள் - 10 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 தேங்காய் மசாலா - 100 கிராம்

 

தேங்காய் மசாலா செய்ய:

 தேங்காய் - அரை மூடி (துருவிக் கொள்ளவும்)

 முந்திரி - 20 கிராம்

 கசகசா - 10 கிராம்

(இதனை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும். இதுதான் தேங்காய் மசாலா.)

 

நண்டு மசாலா தயாரிக்க:

 சோம்பு - 4

 ஏலக்காய் - ஒன்று

 சீரகம் - 3 சிட்டிகை

 மிளகு - 5 கிராம்

 பட்டை - ஒரு துண்டு

மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.

 

செய்முறை:

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நண்டு மசாலா சேர்த்து நன்கு வதக்கிய பின், தேங்காய் மசாலா சேர்க்கவும். கலவை சற்று வதங்கியவுடன் நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகு மற்றும் சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment