Saturday 24 September 2016

இறால்தொக்கு

இறால்தொக்கு

இறால்தொக்கு

 

தேவையானவை:

 

இறால்  250 கிராம்

 

(சுத்தம் செய்தது)

 

பெரிய வெங்காயம்  3

 

சீரகம்  ஒரு டீஸ்பூன்

 

தக்காளி  2

 

பச்சை மிளகாய்  2

 

இஞ்சிபூண்டு பேஸ்ட் 

 

ஒரு டீஸ்பூன்

 

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

 

மிளகாய்த்தூள்  2 டீஸ்பூன்

 

மல்லித்தூள் (தனியாத்தூள்) 

 

ஒரு டீஸ்பூன்

 

கறிவேப்பிலை 

 

  தேவையான அளவு

 

உப்பு  தேவையான அளவு

 

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

 

கொத்தமல்லித்தழை  சிறிதளவு

 

செய்முறை:

 

முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி, இறாலையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இத்துடன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு, கொத்தமல்லித்தழை, சேர்க்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இறால் வேகும்போது அதில் இருந்து வெளிவரும் தண்ணீரே இறால் வேக போதுமானது. தேவைப்படுவோர், ஒரு குழிக்கரண்டி தண்ணீரும் சேர்த்து வேகவிடலாம். வேகவிடும்போது அடுப்பைக் குறைத்து வைத்து தொக்கு பதம் வரும்வரை மூடி போட்டு வெந்ததும் இறக்கினால் இறால்தொக்கு ரெடி.

No comments:

Post a Comment