செங்கோட்டை பார்டர் பரோட்டா
செங்கோட்டை பார்டர் பரோட்டா
தேவையானவை:
மைதா - அரை கிலோ
முட்டை - ஒன்றில் பாதி
எண்ணெய் - 50 கிராம்
வனஸ்பதி - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வனஸ்பதியை மிதமான சூட்டில் உருக்கிக் கொள்ளவும். மைதா மாவை முட்டை, உப்பு, சிறிது தண்ணீர், உருக்கிய வனஸ்பதியை சிறிது சிறிதாகச் சேர்த்து சற்று நெகிழ்வாகப் பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எண்ணெய் ஊற்றி உருண்டைகளாகப் பிடித்து அரை மணி நேரம் மீண்டும் ஊற வைக்கவும். பிறகு சப்பாத்தி போல் தேய்த்து நன்றாக வீசி, சுருள் வட்டமாக செய்து கொள்ளவும். தோசைக்கல்லில் நிறைய எண்ணெய் ஊற்றி, பரோட்டாவை சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment