Wednesday 28 September 2016

பனீர் டகா டக்

பனீர் டகா டக்

பனீர் டகா டக்

 

தேவையானவை 

 பொடியாக நறுக்கிய  பெரிய வெங்காயம் - ஒன்று

 பொடியாக நறுக்கிய  குடமிளகாய் - ஒன்று

 பொடியாக நறுக்கிய  பச்சை மிளகாய் - 2

 பொடியாக நறுக்கிய  தக்காளி - 2

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்)  - கால் டீஸ்பூன்

 மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 கரம்மசாலாத் தூள் - அரை  டீஸ்பூன்

 சாட் பவுடர் - கால்  டீஸ்பூன்

 ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்  

 கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்

 கெட்டித் தயிர்  - 50 மில்லி

 ஃப்ரெஷ் கிரீம் - 50 மில்லி

 பனீர் - 150 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

 சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்

 ஓமம் - 1 டீஸ்பூன்

 

மசாலா செய்ய :

 கடலை மாவு  - அரை டீஸ்பூன்          

 சீரகம் - அரை டீஸ்பூன்         

 இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

 ஆம்சூர் பவுடர் - அரை டீஸ்பூன்  

 கெட்டித்தயிர் - 3 கப்

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இதில் பனீரைச் சேர்த்துப் புரட்டிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில் புரட்டிய பனீரைச் சேர்த்துப் பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் ஓமம் போட்டு பொரிய விடவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி , இஞ்சி-பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும். பின்னர் பொரித்த பனீர் சேர்த்துக் கிளறி ஆம்சூர் பவுடர், சாட் பவுடர் , கரம்மசாலாத் தூள், கஸூரி மேத்தி சேர்த்து வதக்கி, தயிர் மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் ஊற்றி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment