Thursday, 29 September 2016

சன்னா தோசை

சன்னா தோசை

சன்னா தோசை

 

தேவையானவை:

சன்னா மசாலாவுக்கு:

 வெள்ளை/கறுப்பு கொண்டைக்கடலை - 50 கிராம் (ஊறவைத்து, வேகவைக்கவும்)

 பெரிய வெங்காயம் - 1

 தக்காளி - 1

 இஞ்சி - ஒரு துண்டு

 பூண்டு - 5 பல்,

 மிளகாய்த்தூள் - தேவையான அளவு

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - சிறிதளவு

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

 

தோசைக்கு:

 இட்லி மாவு - 2 கப்

 பச்சரிசி மாவு - 2 கப் (உதிரி மாவு)

 நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு

 

சன்னா மசாலா செய்யும் முறை:

கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கவும். தேவையான  உப்பு, தண்ணீர் சேர்த்து சன்னா மசாலாவைத் தயார் செய்யவும்

 

தோசை செய்யும் முறை: இட்லி மாவு மற்றும் பச்சரிசி மாவை உப்பு சேர்த்து தோசை பதத்துக்கு ஒன்றாகக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்ற... அடுப்பை  மிதமான தீயில் வைத்து, சுற்றிலும் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு... தோசை வேகும்போது தயார் செய்த சன்னா மசாலாவை அதன் மீது பரவலாக தேய்த்து மடித்து எடுத்து சுவையாகச் சாப்பிடவும்.

No comments:

Post a Comment