Saturday 24 September 2016

இறால் எக் ரைஸ்

இறால் எக் ரைஸ்
 
இறால் எக் ரைஸ்
 தேவையானவை:
 இறால்  கால் கிலோ (சுத்தம் செய்தது)
 முட்டை  3
 வடித்த சாதம்/பாசுமதி சாதம்  ஒரு கப்
 பச்சை மிளகாய்  3
 பெரிய வெங்காயம்  2
 கரம் மசாலாத்தூள்  ஒரு டீஸ்பூன்
 மிளகாய்த்தூள்  2 டீஸ்பூன்
 மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்
 இஞ்சிபூண்டு பேஸ்ட்  ஒரு டீஸ்பூன்
எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
உப்பு  தேவையான அளவு
கொத்தமல்லித்தழை    தேவையான அளவு

செய்முறை:
சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும். இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும். பிறகு, இறக்கி வேகவைத்து ஆற வைத்த சாதத்துடன் கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஆற வைத்திருந்து இறால் எக் ரைஸ் தயாரித்தால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment