Tuesday, 27 September 2016

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு

அயிரை மீன் குழம்பு

 

தேவையானவை:

 அயிரை மீன் - ஒரு கிலோ

 நல்லெண்ணெய் - 60 மில்லி

 சோம்பு - 15 கிராம்

 வெந்தயம் - 5 கிராம்

 சின்ன வெங்காயம் - ஒரு கிலோ (இரண்டாக நறுக்கவும்)

 பச்சைமிளகாய் - 100 கிராம்

 பூண்டு - 200 கிராம் (விழுதாக அரைக்கவும்)

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 மஞ்சள்தூள் - 15 கிராம்

 மிளகாய்த்தூள் - 50 கிராம்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - 25 கிராம்

 புளி - 250 கிராம் (தண்ணீரில் கரைக்கவும்)

 தயிர் - 100 மில்லி

 தேங்காய் - 2 (ஒரு தேங்காயிலிருந்து எடுத்த பாலை மீனைக் கழுவவதற்கும், மற்றொரு தேங்காய்ப்பாலை சமைப்பதற்கும் வைத்துக்கொள்ளவும்)

 பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கிலோ

 கல் உப்பு - தேவையான அளவு

 

மீன் குழம்பு மசாலா தயாரிக்க:

 சோம்பு - 15 கிராம்

 சீரகம் - 20 கிராம்

 மிளகு - 20 கிராம்

 வெந்தயம் - 5 கிராம்

இவற்றை வெறும் வாணலியில், எண்ணெய் விடாமல் வறுத்து அரைக்கவும். மிக்ஸியை விட, அம்மியில் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

 

அயிரை மீனைக் கழுவும் விதம்:

அயிரை மீனை உயிருடன் வாங்கி, அரை மணி நேரம் தேங்காய்ப்பாலில் ஊறவிடவும். பிறகு, மண் சட்டியில் அயிரை மீன், கல் உப்பு சேர்த்து வழுவழுப்புத் தன்மை இல்லாமல் மூன்று முறை நன்றாகக் கழுவவும். பிறகு தயிரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவவும்.

 

செய்முறை:

வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூளை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்துள்ள மீன் குழம்பு மசாலாவைச் சேர்த்து பச்சை வாடை போக நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவை கொதித்ததும் கெட்டியாக கரைத்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கொதித்து பச்சை வாடை போனதும், தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அயிரை மீனைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

No comments:

Post a Comment