கூரவு தோசை!
கூரவு தோசை!
தேவையானவை:
கூரவு மாவு (கேழ்வரகு) - அரை கிலோ
உளுந்து - 100 கிராம்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரம் ஊறவைத்து, சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்து வைக்கவும். இதனுடன் கூரவு மாவைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு நன்றாகக் கலக்கி 8 மணி நேரம் புளிக்கவிடவும். அவ்வாறு புளித்த மாவை தோசையாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுத்தால், பஞ்சு போல மிருதுவாக இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி, பிரண்டை சட்னி, தக்காளி சட்னி சுவையாக இருக்கும். இதே மாவுடன் துருவிய கருப்பட்டி, தேங்காய்த்துருவல் சேர்த்து நெய் ஊற்றி தோசையாக வார்த்தால், குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
'வேலைக்குச் செல்லும் எங்களுக்கு இதெல்லாம் செய்ய ஞாயிறுக்கிழமைதான் நேரம் கிடைக்கும்' என்கிறீர்களா? அதற்கு நீங்கள் இப்படி செய்யலாம்.
கேழ்வரகு, உளுந்து மற்றும் வெந்தயம் மூன்றையும் வெயில் காலங்களில் நன்கு காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். தேவையான சமயங்களில் மாவை எடுத்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதை 8 மணி நேரம் ஊறவைத்து தோசை வார்த்தால், மிகவும் சுவையாக இருக்கும். இதே முறையில் கேழ்வரகுக்கு பதிலாக கோதுமையும் சேர்த்துச் செய்யலாம். தோசை மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

No comments:
Post a Comment