முருங்கைக்கீரைப் பொடி
முருங்கைக்கீரைப் பொடி
தேவையானவை:
முருங்கைக்கீரை – அரைக் கட்டு
எள் – கால் கப்
உளுந்து – கால் கப்
காய்ந்த மிளகாய் – 15
பூண்டு – 10 பல்
உப்பு – தேவையான அளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
செய்முறை:
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து 2 நாட்கள் நிழலில் காய வைத்து, வெறும் வாணலியில் முறுகலாக வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். உளுந்தையும் எள்ளையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்தெடுக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். எல்லாம் ஆறியதும், முருங்கை இலை, உப்பு தவிர்த்து மற்றவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக, முருங்கை இலை மற்றும் உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து ஆறவைத்துப் பயன்படுத்தவும்.

No comments:
Post a Comment