Sunday, 2 October 2016

சிறுகீரை கட்லெட்

சிறுகீரை கட்லெட்

சிறுகீரை கட்லெட்

தேவையானவை:

 சின்னதாக நறுக்கிய  சிறுகீரை - 100 கிராம்

 சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 50 கிராம்

 நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 மெல்லியதாக நறுக்கிய இஞ்சி- அரை அங்குலம் அளவு

 வேகவைத்த உருளைக்கிழங்கு - 25 கிராம்

 தண்ணீரில் நனைத்து மசித்த பிரெட் - 25 கிராம்

 மல்லித்தூள் (தனியாத்தூள்)- முக்கால் டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - முக்கால் டீஸ்பூன்

 ரஸ்க் பவுடர் - 50 கிராம்

 மைதா - ஒரு டேபிள்ஸ்பூன்

 கறிவேப்பில்லை - சிறிதளவு

 உப்பு- தேவையான அளவு

 

செய்முறை :

கீரையுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு நிமிடம் வேக வைக்கவும்.  பிறகு, இத்துடன் உருளைக்கிழங்கு, பிரெட், உப்பு, மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி சின்னச் சின்ன கட்லெட் மசாலா துண்டுகளாகச் செய்யவும்.

 

மைதாவை 50 மில்லி தண்ணீர் சேர்த்து கட்லெட் மேல் தெளிக்கவும். அதன் மேல் ரஸ்க் பவுடரை தூவவும். பேனில் எண்ணெயைத் தடவி, கட்லெட்டை ஃபிரை செய்யவும்.

 

No comments:

Post a Comment