தினை வல்லாரை சப்பாத்தி
தினை வல்லாரை சப்பாத்தி
தேவையானவை:
தினை மாவு - அரை கப்
கோதுமை மாவு - அரை கப்
வல்லாரைக் கீரை - கால் கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - ஒரு டீஸ்பூன்
ஓமம் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, உப்பு, சீரகம், ஓமம், பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரை நெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிறகு சப்பாத்திகளாகத் தேய்த்து, சூடான தவாவில் இட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் தினை வல்லாரை சப்பாத்தி ரெடி, சப்பாத்தி மீது விருப்பப்பட்டால் சிறிது நெய் தடவி சாப்பிடலாம்.
தேர்வு நேரத்தில் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை பிள்ளைகளுக்குச் செய்து தரவும். ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அதிகம் எண்ணெயில் பொரித்த உணவுப் பண்டங்களைத் தவிர்க்கவும். தினசரி இரண்டு பாதாம் பருப்பு சாப்பிடுவது நல்லது. கண் விழித்துப் படிக்கும் போது காபி, டீக்குப் பதில் பாதாம் பால், கடலை மிட்டாய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

No comments:
Post a Comment