உருளைக்கிழங்கு மசாலா
உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை:
உருளைக்கிழங்கு - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியவுடன் உருளைக்கிழங்கு, சாம்பார்த்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியை ஒரு மூடியால் மூடி, அடுப்பைக் குறைத்து வைத்து வேக விடவும். தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு மசாலாவுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

No comments:
Post a Comment