முருங்கைக்கீரைத் துவட்டல்
முருங்கைக்கீரைத் துவட்டல்
தேவையானவை:
பாசிப்பருப்பு – கால் கப்
முருங்கைக்கீரை – ஒரு கட்டு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
தாளிக்க:
சீரகம் – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
பாசிப்பருப்பை அரை வேக்காட்டுப் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் சுத்தம் செய்த கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை வெந்ததும் பாசிப்பருப்பு சேர்த்துக்கிளறி, உப்பு சேர்த்து லேசாக வதக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment