Monday, 26 September 2016

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு

நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு


நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு

 

தேவையானவை:

 கிளி மீன் (கன்னியாகுமரி கடற்பகுதியில்  அதிகம் கிடைக்கக்கூடியவை) -

  அரை கிலோ

 புளி - ஒரு எலுமிச்சைப் பழ அளவு

 முருங்கைக்காய் - 2

 வெந்தயம் - ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

அரைக்க :

 காய்ந்த மிளகாய் - 7

 கறிவேப்பிலை - சிறிதளவு

 சோம்பு - ஒரு டீஸ்பூன்

 தேங்காய் - ஒன்றில் பாதி (துருவிக் கொள்ளவும்)

 மல்லி(தனியா) - அரை டீஸ்பூன்

 சின்ன வெங்காயம் - 10

 பச்சைமிளகாய் -3

 

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்துசூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் முருங்கக்காயைச் சேர்த்து வதக்கி, கலந்து வைத்துள்ள புளிக்கரைசல் இதில் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். சுத்தம் செய்த மீனை இறுதியாகச் சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment