Saturday, 7 January 2017

சாமை பொங்கல்

சாமை பொங்கல்
தேவையானவை:
 சாமை அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 இஞ்சி - அரை இஞ்ச் நீளமுள்ளது
(தட்டி வைக்கவும்)
 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
 தண்ணீர் - 2 கப்
தாளிக்க:
 நெய் - 2 டீஸ்பூன்
 மிளகு - 1 டீஸ்பூன்
 சீரகம் - முக்கால் டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 1
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை:
அடுப்பில் சிறிய குக்கரை வைத்து நெய் விட்டு உருகியதும் மிளகு, சீரகம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இரண்டாக உடைத்த பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பிறகு இஞ்சி, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, கழுவிய சாமையைச் சேர்த்து கிளறவும். இத்துடன் 2 கப் தண்ணீர் விட்டு சூடானதும் குக்கரை மூடி மிதமான தீயில் 4 விசில் வரை வேகவிட்டு எடுக்கவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து கலவையை மசித்துவிட்டு இறக்கி பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மில்லெட் ஸ்வீட் பொங்கல்

மில்லெட் ஸ்வீட் பொங்கல்
தேவையானவை:
 குதிரைவாலி அரிசி - அரை கப்
 பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
 தூளாக்கிய வெல்லம் - அரை கப் (தலை தட்டியது)
 நெய் - தேவையான அளவு
 ஏலக்காய் - 1
 கிராம்பு - 1
 முந்திரி - 6

செய்முறை:
அடுப்பில் குக்கரை வைத்து பாசிப்பருப்பைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துகொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும்.

அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். ஒருவேளை வெல்லத்தில் கற்கள் இருப்பதாக தோன்றினால் கரையவிட்டு வடிகட்டி, வெந்த அரிசி-பருப்பு கலவையில் சேர்க்கலாம்.

நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 25 December 2016

பேச்சிலர் வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 1 கப்
தேங்காய் பால் - 1/4 கப்
தண்ணீர் - 1 3/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய - 1
பிரியாணி இலை - 1
காய்கறிகள்...
கேரட் - 2
பீன்ஸ் - 6
பட்டாணி - 1/4 கப்
அரைப்பதற்கு...
புதினா - 1/4 கப்
கொத்தமல்லி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* தக்காளி, பீன், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரிசியை கழுவி போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
* இறுதியில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், வெஜிடபிள் பிரியாணி ரெடி



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 15 December 2016

பூண்டு குழம்பு

பூண்டு குழம்பு
தேவையான பொருள்கள்
சின்ன வெங்காயம் -  15 
பூண்டு - 15 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
வெந்தயம் -  கால் ஸ்பூன்
நல்லெண்ணெய்  - 4 ஸ்பூன்
கடுகு  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை -  சிறிதளவு
குழம்பு மிளகாய்  தூள்  -  3 ஸ்பூன்
செய்முறை
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில்   நறுக்கி கொள்ளவும்.
பூண்டை உரித்து வைத்து கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து பூண்டு போட்டு வதக்கி, வெங்காயத்தை வதக்கவும்.
பின் புளிக்கரைசலை சேர்க்கவும். கறிவேப்பிலை, உப்பு,  குழம்புப் பொடியை சேர்த்து நன்கு கொதித்து எண்ணெய்  மேலே மிதந்து  வந்ததும்   இறக்கி பரிமாறவும்



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

உருண்டை மோர்க்குழம்பு

உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை:
துவரம்பருப்பு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – 6
இஞ்சி – ஒரு சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு,
கடுகு    - அரை ஸ்பூன்
பச்சைமிளகாய் 4,
சீரகம் –  1  ஸ்பூன்
மோர் – 2 கப்
தனியா –  1  ஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு கப்
கொத்த மல்லி , கறி வேப்பிலை – சிறிதளவு .
எண்ணெய்       -   1    ஸ்பூன்
செய்முறை:
சிறிதளவு 1    ஸ்பூன்   துவரம் பருப்பு, பச்சைமிளகாய், சீரகம், தனியா, இஞ்சி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும்   ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.
அரைத்த    மசாலா   விழுது  மற்றும்   மோர்  உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மீதி   துவரம்பருப்பை நன்றாக ஊற விடவும். இதனுடன் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்து பிசையவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையைப் போட்டு கெட்டியாகக் கிளறவும். இதனை சிறிய உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து வேக விடவும்.
கடாயில், கலந்து வைத்த மோர் கலவையுடன் வெந்த உருண்டைகளையும் போட்டு, கொத்த மல்லி, கறி வேப்பிலை தூவி, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான  உருண்டை மோர்க்குழம்பு ரெடி



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பச்சை பயறு குழம்பு

பச்சை பயறு குழம்பு
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
வெங்காயம்  - 1
தக்காளி - 2
மல்லித் தூள் - 1
மிளகாய் தூள் - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
கரம் மசாலா - 1  ஸ்பூன்
சீரகம் - 1  ஸ்பூன்
நெய்  - 2 ஸ்பூன்
எண்ணெய் -  2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி உப்பு  போட்டு , 3  விசில் விட்டு   வேக  வைத்து   கொள்ளவும்.
தக்காளி  வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு  கடாயை   அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும்அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து,
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு   வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து  , சிறிதளவு  உப்பு  போட்டு  10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.
சுவையான  பச்சை பயறு குழம்பு ரெடி  இந்த குழம்பு  சப்பாத்தி  தோசை இட்லிக்கு தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வெள்ளை காய்கறி குருமா

 
வெள்ளை காய்கறி குருமா
தேவையான பொருள்கள்
பெரிய வெங்காயம்-1
தக்காளி- 3
உருளைக்கிழங்கு-2
பீன்ஸ்-50கிராம்
காரட்-50கிராம்
பட்டாணி-50கிராம்
பச்சை மிளகாய்-5
தேங்காய்துருவல்-கால்மூடி
கசகசா-அரை  ஸ்பூன்
சோம்பு-1  ஸ்பூன்
முந்திரி பருப்பு  - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய்  - 5 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
கிராம்பு
பட்டை
ஏலக்காய்
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை  காய்கறிகள்  அனைத்தையும்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சை மிளகாய் தேங்காய்துருவல்  கசகசா    சோம்பு   முந்திரி பருப்பு  அனைத்தையும்  சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட்    நறுக்கிய  காய்கறிகள்   சிறிதளவு உப்பு  சேர்த்து  நன்கு வதக்கி  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறி நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில்  சேர்த்து    நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள்  வெள்ளை  குருமா ரெடி.




விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கத்தரிக்காய் வற்றல் குழம்பு

கத்தரிக்காய் வற்றல் குழம்பு
தேவையான பொருள்கள்
நறுக்கிய  சின்ன வெங்காயம் -  10
பூண்டு - 15 பல்
கத்தரிக்காய் வற்றல்  -  10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம்கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு  -  கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
மல்லி தூள்  - 2  ஸ்பூன்
மிளகாய் தூள்  -  1 ஸ்பூன்
மஞ்சள் தூள்கால் ஸ்பூன்
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம்   கருவேப்பிலை  போட்டு தாளித்து  கத்தரிக்காய் வற்றல்     பூண்டு  போட்டு வதக்கி, அதனுடன்  வெங்காயத்தையும் சேர்த்து  வதக்கவும்.
பின்  அதனுடன்  அனைத்து தூள்களையும்   சேர்த்து வதக்கி புளியை கரைத்து  ஊற்றி  ,  தேவையான அளவு   உப்பு,   சேர்த்து நன்கு கொதித்து   எண்ணெய்  மிதந்து வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவைாயன  கத்தரிக்காய்  வற்றல்  குழம்பு ரெடி கத்தரிக்காய் வற்றல் குழம்பு.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மாங்காய் குழம்பு

மாங்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
பெரிய  நீள மாங்காய் - 1
துருவிய  தேங்காய் - அரை மூடி
சீரகம் - 1 ஸ்பூன்
காய்ந்த  மிளகாய் - 6
சாம்பார்  வெங்காயம்  - 5 
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
வெங்தயம்  - கால் ஸ்பூன்
தேங்கா எண்ணெய் -  2
கடுகு  -  கால் ஸ்பூன்
கருவேப்பிலை  -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மாங்காயை    தோல்  சீல்   விரல்  நீள  துண்டுகளாக நறுக்கி   கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், காங்ந்த மிளகாய், சீரகம் மஞ்சள் தூள்    சாம்பார்  வெங்காயம்   அனைத்தையும்  சேர்த்து  தேவையான அளவு  தண்ணீர்   சேர்த்து  நன்கு   அரைத்து கொள்ள வேண்டும்.
பின்பு   கடாயை  அடுப்பில் வைத்து,அதில்  அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் நறுக்கிய மாங்காய்   1 டம்ளர்  தண்ணீர்   தேவைாயன அளவு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்
மாங்காய்  வெந்து குழம்பு  கெட்டியானவுடன்  இறக்கி வைக்கவும்.
பின் ஒரு கடாயில்   எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு   வெங்தயம்    கருவேப்பிலை  போட்டு ,  தாளித்து   அதை இறக்கி வைத்த குழப்பில்  சேர்த்து   நன்கு கிளறிவிடவும்.
சுவையான வாசனையான மாங்காய் குழம்பு ரெடி



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 14 December 2016

அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு

அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
வெங்காயம் - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
* மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பருப்பானது பாதி அளவு வெந்தவுடன் அதில் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், தக்காளி, அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும். அனைத்தும் நன்றாக வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி தாளித்து, அந்த பருப்புக் கலவையில் கொட்டவும்.
* இப்போது அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயார்!!!
* இதனை சாதத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.



விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE